29வது முறையாக ரத்ததான முகாம்:167பேர் ரத்ததானம்

சங்ககிரியில் 29வது முறையாக ரத்ததான முகாம் நடந்தது. இதில் 167பேர் ரத்ததானம் செய்தனர்.

75வது குடியரசு தினத்தினையொட்டி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும், வடுகப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையம், சங்ககிரி, வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பில் 29வது முறையாக ரத்ததான முகாம் வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் 17 பெண்கள் உட்பட 167 பேர் ரத்த தானம் வழங்கினர்.

சங்ககிரி மருத்துவர் ஜெகன்நாதன், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் குமாரசாமி, சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி ஆகியோர் இம்முகாமினை தொடக்கி வைத்தனர். சங்ககிரி பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் கசண்முகம், முன்னாள் கவுன்சிலர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்த தானம் பெறும் பணியினை மேற்கொண்டனர். யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப் நிர்வாகிகள், வி.என்.பாளையம் ஊர்பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள், சங்ககிரி நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் முருகேசன் உள்பட 167 பேர் ரத்ததானம் வழங்கினர்.

விழாக்குழுவினர் சார்பில் ரத்ததானம் அளித்தவர்களுக்கு பல்வேறு வகையான பழங்கள், அசைவ உணவுகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் மணிசங்கர், யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப் நிர்வாகிகள், தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை நிர்வாகி செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, கிஷோர்பாபு, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story