ராசிபுரத்தில் 2ம் ஆண்டு தேசிய அளவிலான வில்வித்தை போட்டி துவக்கம்

ராசிபுரத்தில் 2ம் ஆண்டு  தேசிய அளவிலான வில்வித்தை போட்டி துவக்கம்
வில் வித்தை போட்டி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 2ம் ஆண்டு தேசிய அளவிலான வில்வித்தை போட்டி துவக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வித்யா மந்திர் பள்ளியில், இந்திய வெற்று வில் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெற்று வில் சங்கம் சார்பில், 2ம் ஆண்டு தேசிய அளவிலான வில்வித்தை போட்டி ஏப்ரல் 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் போட்டி துவக்க விழா பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இந்திய வெற்றி வில் சங்கத்தின் தலைவர் சிவக்குமார், ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியின் தலைவர் மாணிக்கம், செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

12, 17 மற்றும் ஓபன் என மூன்று வயது பிரிவுகளாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாள் போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா, பாண்டிச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களில் இருந்து 150 போட்டியாளர்கள் பங்கு கொண்டனர். நாளை இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்த வில்வித்தை போட்டியில் அம்பை ஏய்யும் இலக்கு 10 மீட்டர், 18 மீட்டர், 30 மீட்டர், 40 மீட்டர் 50 மீட்டர் போன்ற இலக்கினை அம்பு தொட வேண்டும் என்ற விளையாட்டினை குறிக்கின்றனர். மேலும் இப்போட்டியில், பொதுச் செயலாளர் கேசவன், துணைத் தலைவர் ரமேஷ், குமார், நந்தகுமார், பெற்றோர்கள், விளையாட்டு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story