2வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சங்ககிரியில் 2வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சங்ககிரி வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரி வட்டக்கிளை தலைவர் மகேந்திரன் தலைமையில் செயலாளர் கவிதா முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும், கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும், 2024 மக்களவை தேர்தல் பணிகளை மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்க வேண்டும், உங்கள் ஊரில் உங்களை தேடி, மக்களுடன் முதல்வர், மக்களின் முகவரி ஆகிய அரசின் திட்டப்பணிகளில் பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொருளாளர் முருகன், துணைத்தலைவர் ராஜீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுமதி, வட்டாட்சியர் அறிவுடைநம்பி, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், தனிவட்டாட்சியர் பி.ஜெயக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சாஜிதாபேகம், வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, வருவாய் ஆய்வாளர் கீதா, வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story