2-ம் கட்டமாக மகளிர் உரிமைத் திட்டம் - மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலைவாணர் அரங்கில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத் திட்டத்தினை துவக்கி வைக்கிறார்.இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், சேவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைக்கிறார், நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.பயனாளிகளின் இருக்கை வசதி, மேலும் பயனாளிகளுக்கு உணவு அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார்.சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பயனாளிகளை காலை குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பான முறையில் பேருந்துகளில் அழைத்து வர வேண்டும் என இந்த ஆய்வில் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி, ஆரணி கோட்டாட்சியர் ம.தனலட்சுமி, செய்யார் கூட்டுறவு ஆலை இயக்குநர், எம்.எஸ்.தரணிவேந்தன், வட்டாட்சியர் மஞ்சுளா, நகர்மன்ற தலைவர், ஏ.சி.மணி, ஒன்றிய குழு பெருந்தலைவர், பச்சையமல் ஸ்ரீனிவாசன் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
