மாநில அளவிலான 2வது குத்துச்சண்டை போட்டி: தங்க பதக்கம்
சாதனை படைத்த மாணவர்
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு போட்டியில் வென்று மாணவர் சாதனை படைத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ. வே. கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில், மாநில அளவிலான 2வது குத்துச்சண்டை போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் 35 மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க செயலாளர் நாகராஜ், (ROC) சேர்மன் லஷ்மி காந்தன் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் மாணவன் S. நரேந்திரன் தங்கப்பதக்கம் வென்றார். சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் R.அனிதாராம் வெற்றி பெற்ற மாணவன் S. நரேந்திரன் மற்றும் பயிற்சியாளர் S.மணிமாறன் இருவரையும் பாராட்டி வாழ்த்தினார்.
Next Story