வாக்குபெட்டியில 2வது சின்னம்...சீக்கிரம் போய் ஓட்டு போடுங்க: அதிமுக வேட்பாளர்

அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
வாக்குபெட்டியில 2வது சின்னம்.சீக்கிரம் போய் ஓட்டு போடுங்க.இல்லைணா கள்ள ஓட்டு போட்டுறுவாங்க என பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் நாராயணசாமி. தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொப்பிலிபட்டி கீரிப்பட்டி இடையபட்டி ஆகிய கிராமப்பகுதிகளி;ல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.பெண்கள் ஆரத்தி எடுத்தும் வழிநெடுக பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.கூட்டத்தில் பேசிய நாராயணசாமி 2 வாக்குபெட்டில முதல் வாக்குபெட்டியில 2வது சின்னம் இரட்டைஇலை.காலைலேயே சீக்கிரம் போய் ஓட்டு போட்டுறுங்க.
இல்லைணா கள்ள ஓட்டு போட்டுறுவாங்க எனக்கூறியவர் நான் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்களிடம் திமுக அரசின் மீது அதிருப்தியை காண முடிகின்றது.அதனால் 2026 எடப்படியார் மீண்டும் முதலமைச்சராவது உறுதி எனப் பேசினார்.
