நாகர்கோவில் மாநகராட்சி பழைய கட்டிடத்தில் 2 மண்டல அலுவலகங்கள்

நாகர்கோவில் மாநகராட்சி பழைய கட்டிடத்தில் 2 மண்டல அலுவலகங்கள்
X
மாநகராட்சி பழைய கட்டிடம்
நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கான அலுவலகம் நாகர்கோவில் மாநகராட்சியின் பழைய கட்டிடத்தில் செயல்பட இருக்கிறது. பழைய கட்டிடத்தின் கீழ்தளத்தில் கிழக்கு மண்டல அலுவலகமும், முதல் தளத்தில் வடக்கு மண்டல அலுவலகமும் அமைகிறது. இதற்காக செய்யப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் உத்தரவின் பேரில் இன்ஜினியர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆய்வு செய்தார் இந்த புனரமைப்பு பணிக்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மண்டல அலுவலகம் ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிந்து செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story