3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
X
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவு
திருச்சி மாநகர காவல்துறைக்குட்பட்டு 14 சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையங்களும், 6 குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்தநிலையில் திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டராக பணியாற்றி வந்த ராஜகணேஷ் எடமலைப்பட்டிபுதூர் சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், எடமலைப்பட்டிபுதூர் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் கோட்டை சட்டம் ஒழுங்கு போலீஸ்நி லைய இன்ஸ்பெக்டராகவும், தில்லைநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் செசன்சு கோர்ட்டு போலீஸ்நிலைய சட்டம் ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி பிறப்பித்துள்ளார்
Next Story