குமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருட்டு

X
Komarapalayam King 24x7 |3 March 2025 7:59 PM ISTகுமாரபாளையத்தில் 3 டூவீலர்கள் திருடப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடராஜா நகர், சுந்தரம் நகர், கோட்டைமேடு பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிட்டர் தொழில் செய்யும் தன்ராஜ், 38, விசைத்தறி கூலி வீரமணி, 37, ஆர்.ஓ. வாட்டர் சர்வீஸ் செய்யும் மோகன்ராஜ், 25, ஆகியோர் பிப், ௧௩, ௧௮, 25 ஆகிய நாட்களில் தங்கள் வீட்டின் முன்பு தங்களது டூவீலர்கலான பேசன் புரோ வாகனங்கன் இரண்டு, பிலாட்டினா வாகனம் ஒன்று ஆகிய மூன்று வாகனங்கள் இரவில் நிறுத்தி வைத்திருந்தனர். மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, அவைகள் காணவில்லை. இது குறித்து மூவரும் குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளனர். இதன்படி குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். தொடர் வாகணங்கள திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
Next Story
