ரூ.3 கோடியில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கு திறப்பு

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் ரூ.3 கோடியில் முதல்வர் சிறு விளையாட்டு அரங்கை துணை முதல்வர் உதயநிதி காணொலி மூலம் திறந்து வைத்தார். விளையாட்டரங்கில் நடை பெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் விளையாட்டு போட்டிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார் பின்னர் தேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் சிறு விளையாட்டு அரங்கு 9 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 400 மீட்டர் தடகள ஓடுதளம், கால் பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கான மைதா னங்கள், பார்வையாளர் அமரும் இடம், விளையாட்டு உபகரணங்கள் வைப்பு அறை, அலுவலக அறை, உடை மாற்றும் அறை போன்ற வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் சிறு விளையாட்டு அரங்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 6 முதல் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. விரைவில் திருப்பத்தூர், மானாமதுரை தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
Next Story

