3 மாத குழந்தையை கொலை செய்ய முயற்சித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, குழந்தையின் தாய் புகார்

X
Komarapalayam King 24x7 |18 July 2025 9:02 PM IST3 மாத குழந்தையை கொலை செய்ய முயற்சித்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, போலீசில் குழந்தையின் தாய் புகார் கூறியுள்ளார்.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் எதிரில் வசிப்பவர்கள் முருகன், 45, பிரேமலதா, 34, விசைத்தறி கூலி. ஈரோட்டை சேர்ந்த தம்பதியர் சவுந்தரராஜன், 35, சசிரேகா, 28. ஜவுளி தொழில். சவுந்தர்ராஜன், முருகன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு, குமாரபாளையம் நகரில் வாடகைக்கு பவர்லூம் பட்டறை எடுத்து நடத்தி வந்தனர். அப்போது இரு குடும்பத்தாரும் சகஜமாக பேசி, பழகி வந்துள்ளனர். தற்போது தொழில் நலிவடைந்ததால், அந்த தொழிலை விட்டு விட்டனர். ஆனாலும் இவர்கள் எப்போதும் போல் பேசி பழகி வந்துள்ளனர். சவுந்தர்ராஜன், பிரேமலதாவிடம் பேசுவது, சசிரேகாவிற்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சசிரேகா நேற்றுமுன்தினம் மாலை 04:30 மணியளவில், குமாரபாளையம் பிரேமலதா வீட்டிற்கு வந்து, அவரது மூன்று மாத குழந்தையை பிடுங்கி, மாடியிலிருந்து கீழே போட முயற்சித்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, குழந்தையை காப்பாற்றினர். இது குறித்து அருகே வசிப்பவர்கள் கூறியதாவது: இரு குடும்பத்தாரின் பிரச்சனைக்கு மூன்று மாத குழந்தையை மாடியிலிருந்து தூக்கி போட முயற்சிப்பது, தவறு. அருகில் உள்ள பெண்கள் குழந்தையை கீழே போட விடாமல் தடுத்ததால் குழந்தை காப்பற்றப்பட்டது. இது குறித்து சசிரேகா மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இது குறித்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலகு அலுவலகத்திலிருந்து வந்த அலுவலர்கள் குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
