3 மணி நேரம் பெய்த கன மழை

X
Komarapalayam King 24x7 |23 Nov 2025 7:06 PM ISTகுமாரபாளையத்தில் 3 மணி நேரம் கன மழை பெய்தது.
குமாரபாளையத்தில் இரவு நேரங்களில் குளிர்ச்சி நிலவினாலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் கொஞ்சம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 01:00 மணியளவில் திடீரென மழை பெய்தது. குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர். சின்னப்பநாயக்கன்பாளையம். தெற்கு காலனி. குப்பாண்டபாளையம். சாணார்பாளையம். மற்றும் தட்டாங்குட்டை. உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 மணி நேரம் கன மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த மழையின் காரணமாக சற்று குளிர்ச்சி நிலவியது. சாலையோர வியாபாரிகள் கடை வைக்க தயாரான போது மழை வந்ததால், சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Story
