3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார்.
பெரம்பலூர் மாவட்டம் பல்வேறு முகாம்களில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்காக 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் வழங்கினார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஏழ்மை நிலையில் உள்ள 3 பயனாளிகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டிற்கான 3 கறவை மாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் இன்று(08.08.2025) வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளிட்ட முகாமில் வாழ்வாதாரம் வேண்டி மனு அளித்த 13 நபர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்திடும் பொருட்டு மனு அளித்த நபர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களா என ஆய்வு செய்து அவர்களுக்கு இலவச கறவை மாடுகளை வழங்கிட உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். அம் மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் ஏழ்மை நிலையில் உள்ள கீழ்கணவாய் கிராமத்தை சேர்ந்த கே.கார்த்திகேயன், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்த ருக்மணி, டிகளத்தூர் கிராமத்தை சேர்ந்த கமலம் ஆகியோர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோசம்ரக்சனா டிரஸ்ட் மூலமாக பெறப்பட்ட 3 கறவை மாடுகளை 3 பயனாளிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார். கறவை மாடு பெற்ற 3 பயனாளிகள் கூறுகையில் நாங்கள் அனைவரும் ஏழ்மையில் வசிப்பதாகவும், பொருளாதார தேவைக்காக கறவை மாடு கடன் உதவி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று எங்களுக்கு இலவசமாக கறவை மாடுகளை கால்நடை பராமரிப்பு துறை மூலமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி எங்களுக்கு மறுவாழ்க்கை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்த உதவிக்காக தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் நிறைந்த மனதுடன் நன்றி கூறுவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பகவத்சிங், துணை இயக்குநர் , உதவி இயக்குநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story



