கொலை வழக்கு குற்றவாளிகள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மத்திய சிறை
தருவையை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் தருவை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டி,முத்து செல்வம் (22), பாலாஜி (26) ஆகிய மூவரும் ஏற்கனவே கொலை வழக்கு தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவுக்கு இணங்க குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
Next Story