வீட்டு உபயோக சிலிண்டர்களிலிருந்து வணிக சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்த 3 பேர் கைது!!
தஞ்சாவூர் அருகே வீட்டு உபயோக சிலிண்டர்களிலிருந்து வணிக சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்த 3 பேரை காவல் துறைனர் கைது செய்துள்ளனர்
தஞ்சாவூர் அருகே வீட்டு உபயோக சிலிண்டர்களிலிருந்து வணிக சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்த 3 பேரை காவல் துறைனர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் வீட்டு உபயோக சிலிண்டர்களிலிருந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு மாற்றி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது. இதன் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன், ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பிள்ளையார்பட்டியில் உள்ள கிடங்கில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். இதில், நவீன கருவிகள் மூலம் வீட்டு உபயோக சிலிண்டர்களிலிருந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த 150 சிலிண்டர்களையும், இதற்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிடங்கு மேலாளரும், வாகன உரிமையாளருமான தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த வி.சுப்பிரமணியன் (60), அம்மன்பேட்டையைச் சேர்ந்த எம்..சுப்பிரமணியன் (46), மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காடைச் சேர்ந்த ஜி.கருணாநிதி (42) ஆகியோரை கைது செய்தனர்.
Next Story