இளைஞரை வெட்டிய 3 போ் கைது

இளைஞரை வெட்டிய 3 போ் கைது
X

கைது 

திருவெறும்பூா் அருகே முன்விரோதத்தில் இளைஞரை வெட்டிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அழகேசன் மகன் மோகன் (34). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பிச்சை ரத்தினம் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை இருந்துள்ளது. இப்பிரச்னையில் ஏற்பட்ட தகராறில் மோகனின் உறவினா் ஜெயபால் என்பவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். இந்நிலையில் மோகன், பிச்சை ரத்தினத்தை மருமகளை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பிச்சை ரத்தினத்தின் மகன்கள் தளபதி (34), பிரபாகரன் (31), சுந்தர்ராஜ் (36), சா்க்காா்பாளையத்தைச் சோ்ந்த குமரகுரு (32), காா்த்திக் குமாா் (28)ஆகிய 5 பேரும் சோ்ந்து மோகனை ஞாயிற்றுக்கிழமை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் திருவெறும்பூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, தளபதி, குமரகுரு, காா்த்திக் ஆகிய மூவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.

Tags

Next Story