புகையிலை விற்பனை செய்த 3 பெட்டி கடைகளுக்கு சீல்  !

புகையிலை விற்பனை செய்த 3 பெட்டி கடைகளுக்கு சீல்  !

புகையிலை விற்பனை

புகையிலை விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஆகியோர் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா என குளச்சல் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரும்பிலி பகுதியில் உள்ள பாலம் அருகில் உள்ள நேசம் (60), இரும்பிலி அருள்தாஸ் (64), ஈத்தங்காடு மகாலிங்கம் (55) ஆகியோரின் பெட்டிக்கடைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட 50 பாக்கெட்டு புகையிலை பொட்டலங்கள் விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அதிகாரிகள் அந்த புகையிலை பொட்டலங்களை பறிமுதல் செய்து கடைகளை சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த கடைக்காரர்கள் ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்திவிட்டு 15 நாட்களுக்குப் பின் கடை திறக்க அனுமதி அளிக்கப்படும். அதன் பின்பும் புகையிலை விற்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags

Next Story