டூவீலர் திருட்டு வழக்கில் 3 சிறுவர்களுக்கு தண்டனை
டூவீலர் திருட்டு வழக்கில் 3 சிறுவர்களுக்கு தண்டனை
சேலத்தில் டூவீலர் திருட்டு வழக்கில் கைதான 3 சிறுவர்களுக்கு ஓராண்டு சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.
சேலம் அம்மாபேட்டை, கிச்சிபாளையம் பகுதிகளில் நடந்த டூவீலர்கள் திருட்டு வழக்கில் 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகள் சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர், சிறுவர்கள் இரண்டு பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், மற்றொரு சிறுவனுக்கு 8 மாதம் சிறை தண்டனையும் வழங்கினார். இதையடுத்து நேற்று மாலை 3 சிறுவர்களும் செங்கல்பட்டில் உள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story