3 பசு மாடுகள் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

3 பசு மாடுகள் உயிரிழப்பு -  போலீஸ் விசாரணை

3 பசு மாடுகள் உயிரிழப்பு - போலீஸ் விசாரணை

தியாகதுருகம் அருகே 3 பசுமாடுகள் உயிரிழப்பு. போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த மேல்வழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; விவசாயி. இவர், நேற்று முன்தினம் தான் வளர்க்கும் 3 பசு மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைத்து நிழலில் கட்டி விட்டு குடும்பத்துடன் சித்தலுார் கோவிலுக்குச் சென்றார். மதியம் 12:30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது 3 மாடுகளும் இறந்து கிடந்தன. தொட்டியில் இருந்த தண்ணீரின் நிறம் மாறி இருந்ததால் யாரேனும் விஷம் கலந்து இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story