3 நாள் தொடர் விடுமுறை: ஒரே நாளில் ரூ.14 கோடிக்கு மது விற்பனை

3 நாள் தொடர் விடுமுறை: ஒரே நாளில் ரூ.14 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக் 

சேலம் மாவட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.14 கோடிக்கு மது விற்பனையானது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் அனைத்தும் 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை 3 நாட்கள் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் 3 நாட்கள் மதுபான கடைகள் மூட மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 220 டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. வழக்கமாக மாவட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெறும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு தினங்களில் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் மதுபானம் விற்பனை ஆகும். நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 நாள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் ரூ.14 கோடிக்கு மனுபானம் விற்பனை ஆகி உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story