சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த 3 நாள் பயிற்சி

கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரியில் நெல்பயிரில் உயர்விளைச்சல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த 3 நாள் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் இயங்கி வரும் கீழ்வேளூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கீழ்வேளூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் ஹைதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நெல்பயிரில் உயர்விளைச்சல் சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த 3 நாள் பயிற்சி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்சிக்கு வேளாண்மை துணை இயக்குநர் ஈஸ்வரன், கீழ்வேளூர் உதவி இயக்குநர் தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் மண்ணியல் உதவி பேராசிரியர் அனுராதா வரவேற்றார். வேளாண் கல்லூரியின் முதல்வர் ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பயிற்சி வகுப்பில் வேளாண்மை துணை இயக்குநர் தேவேந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் பேசுகையில் நாகை மாவட்டத்தில் 65 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடம் குருவை 24 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி செய்யப்பட்டது.

நெல் சாகுபடி சாகுபடி தொடங்குவதற்கு முன் மண் மாதிரி எடுத்த மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு அற்கு ஏற்றாற்போல் உரம் இடவேண்டும். நாகை மாவட்டத்தில் கலர், உவர் நிலமாக தான் உள்ளது. தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் பெய்யும் மழை நாகை மாவட்டத்தில் வந்து தான் வடிய வேண்டும் இதனால் தான் நாகை மாவட்டம் கடைமடை மாவட்டமாக உள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை ஜிப்சம் தெளித்து டிராக்டர் கொண்டு உழுது பின்னர் நிலத்தில் உள்ள அதிக நீரை வடிகட்டும் போது நிலத்தில் உள்ள உவர்ப்பு வெறியேறும். நாகை மாவட்டத்தில்90 சதவீத விளை நிலங்கள் நேரடி நெல் விதைப்பு செய்யப்படுகிறது.

நேரடி நெல்விதைப்பில் களை அதிகம் வரும், கோடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்படுவதோடு பூஞ்சானம் அழிக்கப்படுவதோடு பூச்சிகளின் முட்டைகளும் அழிக்கப்படும். கோடை உழவு செய்த வயலில் ஏக்கருக்கு 10 கிலோ யூரியா தெளிக்க வேண்டும். சேற்றில் யூரியா தெளித்தால் உரமாகவும், கோடை உழவில் தெளித்தால் களை கொல்லியாக இருக்கும். நெல் பயிர் அதிக தூர் கட்டவும், வாழ்ப்பாகவும் இருக்க துத்தநாக சல்பேட் 10 கிலோ அல்லது நெல் நுண்ணுட்டம் 5 கிலோ தெளிக்க வேண்டும். 80 சதவீதம் முளைப்பு திறன் கொண்ட 13 சதவிதம் ஈரப்பதம் உடைய விதை நெல் தரமான நெல் விதையாகும். நெல் விதையை விதை நேர்த்தி செய்திட வேண்டும். 1விதை நெல்லை குளிர்ந்த தண்ணீரில் ஊர வைக்க வேண்டும். சரியா முறையில் நெல் சாகுபடி செய்தால் ஒரு கதிருக்கு 160 நெல் மணிகள் இருக்க வேண்டும்.

நெல்விதை முளைத்த 15 நாட்களுக்கு பின் தண்ணீர் வைத்து களை கொல்லி தெளித்து உரம் இட வேண்டும். மேலும் மணி சத்து அதிகம் உள்ள வயலில் பாசி பிடித்திருக்கும் இது மண் மேல் படித்து பயிரை வளர விடாது. அதை அகற்ற காப்பர் சல்பட்பேட்டை ஏக்கர்க்கு 2 கிலோ மணலில் கலந்து தெளிக்க வேண்டும். நெல் சாகுபடியை முறையாக முறையாக செய்தால் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் மகசூல் பெறலாம். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர் தாமோதரன், உதவி பேராசிரியர்கள் கமல்மரன், கமலக்கண்ணன், நாராயணன் உள்ளிட்ட பலர் உலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பேட்டரியல் இயங்கும் கைதெளிப்பான், மற்றும் நெல் நூண்ணூட்டம் போன்ற இடுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story