இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் - மூவர் படுகாயம்

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் - மூவர் படுகாயம்

விபத்து 

கரூர் அருகே இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், கருப்பூர்,சின்னமலை பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியாண்டி வயது 40. மணவாசி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் யுவன் சங்கர் வயது 10. இவர்கள் இருவரும் அவர்களுக்கு சொந்தமான டூவீலரில், ஏப்ரல் ஒன்பதாம் தேதி காலை 8 மணி அளவில், திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம் மணவாசி பகுதியில் உள்ள பாஸ்கரன் வீடு அருகே வந்த போது, எதிர் திசையில்,மணவாசி பகுதியைச் சேர்ந்த சாந்து முகமது மகன் நத்தோலி வயது 19 என்ற இளைஞன், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் பழனியாண்டி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரு வாகனங்களும் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் பழனியாண்டியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையிலும்,யுவன் சங்கரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், நத்தோலியை கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த பழனியாண்டியின் மனைவி அம்சவல்லி வயது 30 என்பவர் இது குறித்து அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நத்தோலி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags

Next Story