அறிவியல் திருவிழா காஞ்சி ஆசிரியர்கள் 3 பேர் பங்கேற்பு
அறிவியல் திருவிழா காஞ்சி ஆசிரியர்கள் 3 பேர் பங்கேற்பு
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் நடந்தது. இதில் காஞ்சி ஆசிரியர்கள் 3 பேர் பங்கேற்றனர்.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா, ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் நடந்தது. இதில், எளிய அறிவியல் சோதனைகள், இயந்திரவியல், புவி ஈர்ப்பு விசை என, மாணவர்களுக்கு இயற்பியல் பாடம் எளிய முறையில் கற்பிக்கும் வகையில் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்திலிருந்து 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அறிவியல் திருவிழாவில் பங்கேற்றனர்.
இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து மூன்று அரசு பள்ளி ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, உத்திரமேரூர் 1-3வது வார்டு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர் அன்பழகன், கீழ்கதிர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பழமலைநாதன், தேனம்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வரதராஜன் ஆகிய 3 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பங்கேற்றனர்."
Next Story