கடலில் விழுந்து மாயமான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி 

கடலில் விழுந்து மாயமான வாலிபர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி 
முதல்வர்
கன்னியாகுமரி மாவட்டம், குளைச்சல் பகுதியை சேர்ந்த மீனவர் கடலில் வீழ்ந்து மாயமானதை அடுத்து அவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முஹைதீன் யாசர் அலி (32). இவர் சமையல் பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 8ம் தேதி கடலுக்கு சென்ற மீனவர்களுடன் சமையல் பணிக்காக முஹைதீனும் சென்றிருந்தார். கொச்சி துறைமுக எல்லைக்குட்பட்ட அரபிக் கடல் பகுதியில் 163 கிலோமீட்டர் தூரத்தில் அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். சூறைக்காற்று வீசியபோது படகில் இருந்த முஹைதீன் தவறி கடலுக்குள் விழுந்து மாயமானார்.

போலீஸாரும், கடலோர காவல் படையினரும் ஆழ்கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் முஹைதீன் கிடைக்கவில்லை. இதையடுத்து தமிழக முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடலில் விழுந்து மாயமான முஹைதீனின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story