போலீஸ் ஏட்டுக்கு 3 மாதம் சிறை - நாகை கோர்ட்டு தீர்ப்பு

போலீஸ் ஏட்டுக்கு 3 மாதம் சிறை -  நாகை கோர்ட்டு தீர்ப்பு

கைது 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு சாராயம் மற்றும் மது கடத்தல் சம்பவங்கள் போலீஸ் ஏட்டுக்கு 3 மாதம் சிறை மற்றும் ரூ 20 ஆயிரம் அபராதம் என நாகை கோர்ட்டு தீர்ப்பு
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு சாராயம் மற்றும் மது கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேதாரண்யம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் நடராஜன் (வயது 50). இவர் கடந்த 6.9.2016 அன்று நாகை அருகே முட்டத்தில் சக போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் இருந்து சாராய மூட்டைகளை கடத்தி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் நடராஜன் மீது மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு அங்கிருந்து மின்னல் வேதத்தில் தப்பி சென்று விட்டார். இதில் நடராஜன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 பற்களும் பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பினார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜன் மீது சாராய மூட்டைகளுடன் மோட்டார் சைக்கிளை மோத விட்டு தப்பி சென்ற நாகை தெற்கு நால்லியான் தோட்டத்தை சேர்ந்த ராஜா மகன் முத்துப்பாண்டி (32) என்பவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாகை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி கார்த்திகா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் போலீஸ் ஏட்டு நடராஜன் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு கொலை முயற்சி செய்த குற்றத்துக்காக முத்து பாண்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கும் படி உத்தரவிட்டார். இதையடுத்து முத்து பாண்டியை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ...

Tags

Next Story