சேலம் அரசு ஐடிஐயில் 3 மாத குறுகிய கால தொழிற்பயிற்சி

சேலம் அரசு ஐடிஐயில் 3 மாத குறுகிய கால தொழிற்பயிற்சி

சேலம் அரசு ஐடிஐயில் 3 மாத குறுகிய கால தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


சேலம் அரசு ஐடிஐயில் 3 மாத குறுகிய கால தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு ஐடிஐயில் நடத்தப்பட்டு வரும் 3 மாத குறுகிய கால தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் ஐடிஐ துணை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் என்ற 3 மாத குறுகியகால பயிற்சி, தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சிக்குரிய சேர்க்கை நடைபெறவுள்ளது.

இதில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பயிற்சியில் சேர விருப்பம் இருப்பின், வரும் 22ம் தேதிக்குள் தங்களது அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் 4 ஆகியவற்றுடன் சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி விபரம் பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கு நேரடியாகவோ அல்லது https://forms.gle/wrNbpo4Bbie8A4z7A கூகுள் படிவத்தில் ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான மேலும் விபரங்களுக்கு சேலம் ஏற்காடு மெயின் ரோட்டில் உள்ள அரசு ஐடிஐ துணை இயக்குநரை நேரிலோ அல்லது 75026 28826 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story