தென்காசியில் ரயில்வே காப்பர் வயர் திருட்டிய 3 பேர் கைது

தென்காசியில் ரயில்வே காப்பர் வயர் திருட்டிய 3 பேர் கைது

தென்காசியில் சுமார் 792. 26 கிலோ ரயில்வே காப்பர் வயர் திருட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுனர்.


தென்காசியில் சுமார் 792. 26 கிலோ ரயில்வே காப்பர் வயர் திருட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுனர்.

தென்காசி மாவட்டம் தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தின் எல்கையான செங்கோட்டை யில், செங்கோட்டை - புனலூர் வரையிலான ரயில்வே மின்மயமாக்கல் பணி நடந்து வருகிறது. மின் மயமாக்கல் திட்டத்தில் மின் கம்பிகள் முழுவதும் செம்பு கம்பிகளாக இருக்கிறது. வேலை முடிந்த பிறகு செங்கோட்டை ரயில்வே யார்டில் மீதமுள்ள செம்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தது. அப்படி வைக்கப்பட்டிருந்த செம்பு கம்பிகளில் சுமார் 792. 26 கிலோ காப்பர் வயர்கள் திருடு போனதாக கிடைத்த புகாரின் பேரில் தென்காசி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டது.

வழக்கு சம்பந்தமாக திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்திரவு படி திருநெல்வேலி இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் அறிவுறுத் தல் படி திருநெல்வேலி இருப்புப்பாதை காவல் நிலைய வட்ட ஆய்வாளர் செல்வி தலைமையில் உதவி ஆய்வாளர் மாரி முத்து, தலைமை காவலர் பொன் தனசேகரன், அய்யாசாமி ஆகியோர் அடங்கிய தனிப் படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது விஸ்வநாத புரத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் மாரி செல்வம், கொம்பையா மகன் கார்த்திக், மற்றும் திருட்டு பொருட்கள் வாங்கி விற்றது வியாபாரி அருணாசல புரத்தை சேர்ந்த வைரவன் மகன் கிருஷ்ணசாமி ஆகியோர் என தெரிய வந்தது. இவர்களை நேற்று தனிப்படையினர் கைது செய்தனர்.

Tags

Next Story