வாலிபர் கொலை: 3 பேர் கைது? மேலும் இரண்டு பேருக்கு போலீசார் வலைவிச்சு !

வாலிபர் கொலை: 3 பேர் கைது? மேலும் இரண்டு பேருக்கு போலீசார் வலைவிச்சு !
கைது
தூத்துக்குடி அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் மேலும் இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகேயுள்ள பக்கப்பட்டியைச் சோ்ந்த பிரமுத்து மகன் வடிவேல் முருகன் (28). இவா் நேற்று ஒரு கொலை வழக்குத் தொடா்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பைக்கில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாராம். தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் பொட்டலூரணி விலக்கு அருகே அவரை மா்ம நபா்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் பக்கபட்டி கிராமத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 2பேர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக கடந்த 2022ஆம் ஆண்டு பாளையங்கோட்டை பெருமாள் கண்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் வடிவேல் முருகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகி விட்டு செல்லும்போது வடிவேல் முருகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் காடுஉடையார் பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் இத்தக்கிமுத்து (30) பக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அருண்குமார் (24), நெல்லை மாவட்டம் சொக்கட்டான் தோப்பு குமார் மகன் ஆறுமுகம் என்ற அலெக்ஸ் (22) உட்பட 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதில் 3பேரை பிடித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜா சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்

Tags

Next Story