தந்தையை கொன்று நாடகமாடிய மகன் உட்பட 3 பேர் கைது  

தந்தையை கொன்று நாடகமாடிய மகன் உட்பட 3 பேர் கைது  

கைது  

நாகர்கோவிலில் தந்தையை கொன்று நாடகமாடிய மகன் உட்பட 3 பேர் கைது  
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (65). இவர் நாக்கால்மடம் விலக்கு அருகே உள்ள நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். பிரபாகரன் கடந்த 10-ம் தேதி தனது பைக்கில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்தவர்கள் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் உயிரிழந்தார் இரு தொடர்பாக பிரபாகரனின் மகன் அனீஸ் குமார் (36)என்பவர் சுசீந்திரம் போலீசில், தந்தைக்கு வழிப்பு நோய் இருந்ததாகவும், வலிப்பு நோய் வந்து பைக்கில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். போலீசார் வலிப்பு வந்து மரணம் என வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில் பிரபாகரன் கழுத்து மற்றும் தலையில் வெட்டுக்காயம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சுசீந்திரம் போலீசார் பிரபாகரன் விழுந்து கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரனை பைக்கில் வந்தவர்கள் வெட்டி கீழே தள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பிரபாகரனுக்கும் மகன் அனிஸ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் அடிப்படையில் அனீஸ் குமார் ரகசியமாக போலீசார் கண்காணித்தரர்.இதில் அவர் சுதன் (22) , ராஜா (25)ஆகியுடன் சேர்ந்து பிரபாகரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் அனீஸ் குமார், சுதன், ராஜா ஆசிய மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அனீஸ் குமாருக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. திருமணமாகி குழந்தை இல்லாத காலகட்டத்தில் பிரபாகரன் தனது மகனை குழந்தை பெற முடியாதவன் என்று மிகவும் கேவலமாக திட்டியதாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவதூறு பேசியதாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்களுக்கு 4 லட்சம் தருகிறேன் என்று பேரம் பேசி இந்த கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags

Next Story