அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்: பொங்கல் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு 20 பேருடன் பொங்கல் விடுமுறைக்காக சென்று ஆலங்குளம் திரும்பியபோது தாராபுரம் புறவழிச் சாலையில் உள்ள அமராவதி ஆற்றில் அபாயம் பலகை இருப்பதை உணராமல் குளிக்கும் போது ஆழம் தெரியாமல் சின்ன கருப்பு (31) பாக்கியராஜ் (39) ஹரி (16) மூன்று பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.ஆற்றில் மூழ்கிய மூவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துணியில் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பி வைத்தனர். மேலும் s. ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், சின்ன கருப்பு, தங்க நகை செய்பவர்கள்.ஹரி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஆவார். இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . இதுகுறித்து தாராபுரம் காவல்துறையினர் விசாரணை நடைபெற்று வருகிறது...