தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம்

பைல் படம் 

கந்தம்பட்டி மேம்பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை 7மணியளவில் கந்தம்பட்டி மேம்பாலம் பகுதியில் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கோவை நோக்கி கன்டெய்னர் லாரி சென்றது. அந்த லாரி திடீரென தூய்மை பணி செய்து கொண்டிருந்த 3 பேர் மீதுமோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த சூரமங்கலம் போலீசார், லாரி டிரைவரான ஜகீர்உசேனை (24) கைது செய்தனர். விசாரணையில், படுகாயமடைந்தவர்கள் ஆண்டிப்பட்டியை சேர்ந்த மஞ்சுளா (40), சேலத்தாம்பட்டி கவுசல்யா (29), பச்சனம்பட்டி சின்னப்பன் (35) என்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story