ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
பைல் படம்
கன்னியாகுமரியில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்தவர் சகாய கவின் (25). இவர் மீது தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கை மீறி தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து சகாய கவினை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரை செய்தார். இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, சகாய கவினை, தக்கலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதே போல சாமிவிளையை சேர்ந்த சிவசங்கர் (26), நீண்டகரை பெரு விளையை சேர்ந்த விஷ்ணுகுமார் (24) ஆகியோரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வழக்குகள் உள்ளது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை மூன்றாக பதிவாகி உள்ளது.

Tags

Next Story