மனமகிழ் மன்றத்தில் போலி மது…..3 பேர் கைது
போலீசார் விசாரணை
புல் மதுபான பாட்டில்களில் இருந்து குவாட்டர் பாட்டில்களில் போலி மதுபானத்தை அடைத்து விற்பனை.
திருச்சி-தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே சூர்யா என்ற பெயரில் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மனமகிழ் மன்றத்தில் உறுப்பினர்கள் விளையாட வரும்போது அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய அனுமதி இல்லை. உறுப்பினருடன் வரும் நண்பர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யலாம். காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை இங்கு மதுபான விற்பனை செய்ய அனுமதி உண்டு.மனமகிழ் மன்றத்தில் விளையாடுவதற்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மனமகிழ் மன்றங்கள் முழுநேர மதுபான கடைகளாகவே செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது வழக்கமாக டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும். விலையை விட இங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது உண்டு.  அதோடு மதுபானம் பாட்டிலாக விற்பனை செய்யக்கூடாது. “பெக்” அளவில் தான் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் விதி மீறலாக பாட்டில் பாட்டிலாக இங்கு விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. இதற்காக டாஸ்மாக் நிறுவனத்தில் இருந்து நேரடியாக மானிய விலையில் மதுபான வகைகளை கொள்முதல் செய்து சில்லறை விற்பனை செய்து வருகின்றனர்.இது தவிர இதர டாஸ்மாக் மதுபான பார் உரிமையாளர்கள் மாதந்தோறும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது போல் இவர்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்த மனமகிழ் மன்றங்களுக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் திருச்சி- தஞ்சை சாலையில் பழைய பால் பண்ணை அருகே 3 மாடி கட்டிடத்தில் தனியார் மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருகிறது. பழைய பால் பண்ணை அருகே செயல்படும் மனமகிழ் மன்றத்தில் போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன்படி நேற்று அதிகாலை 5 மணி அளவில் அந்த குறிப்பிட்ட மனமகிழ் மன்றத்தில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலி மதுபானங்கள் பதுக்கி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தற்போது தேர்தல் சமயம் என்பதால் அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் கள்ளச்சந்தை மூலம் மதுபான விற்பனை இந்த மனமகிழ் மன்றத்தில் விற்பனை செய்வது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. மனமகிழ் மன்றத்தில் இருந்த 130க்கும் மேற்பட்ட புல் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.புல் மதுபான பாட்டில்களில் இருந்து குவாட்டர் பாட்டில்களில் போலி மதுபானத்தை அடைத்து விற்பனை செய்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மனமகிழ் மன்ற நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி 3 பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது.
Next Story