நிறுத்தி வைக்கப்பட்ட ஷூ கம்பெனி பேருந்தில் டீசல் திருடிய 3 நபர்கள் கைது

ஊத்தங்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்ட ஷூ கம்பெனி பேருந்தில் டீசல் திருடிய 3 நபர்கள் கைது,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முருகந்தாள் கிராம பகுதியில் ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் இயங்கி வரும் ஷூ கம்பெனி பேருந்து முருகந்தாள் கிராமத்தில் பணியாளர்களை இறக்கி விட்டு நிறுத்தி வைக்கப்பட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்தில் அடிக்கடி டீசல் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியில் டீசல் திருட்டில் ஈடுபடும் நபரை பிடிப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் காத்திருந்தனர். சம்பவப் பகுதியில் டீசல் திருட ஷிப்ட் காரில் மூன்று நபர்கள் வந்தனர். அவர்கள் பேருந்தில் இருந்த 150 லிட்டர் டீசலை திருடிய போது பொதுமக்கள் பிடிக்க முயற்சி செய்தனர் அதில் மூன்று நபர்களும் காரில் தப்பித்து ஓடி உள்ளனர் இந்த நிலையில் பொதுமக்கள் அவர்களிடம் சண்டையிட்ட பொழுது அவர்களிடமிருந்த செல்போன் பொதுமக்களிடம் பிடிபட்டது செல்போனை கல்லாவி காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்து தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் கல்லாவி காவல்துறையினர் செல்போன் முகவரியை அறிந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர் இதில் ஊத்தங்கரை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி செல்லும் சாலையில் உள்ள பெரிய கவுண்டனூர் கிராமப் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் 25 தகப்பனார் பெயர் மாது அதே கிராமத்தை சேர்ந்த ஜீவா 23 தகப்பனார் பெயர் கலைமணி அதே கிராமத்தைச் சேர்ந்த குபேந்திரன் 30 தகப்பனார் பெயர் கணபதி என்பவர் பிடிபட்டனர். இவர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 150 லிட்டர் டீசல் பறிமுதல் செய்தனர் இதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக சிங்காரப்பேட்டை காவல் சரக எல்லைக்குட்பட்ட பாவக்கல் பகுதியில் டீசல் திருட்டில் ஈடுபட்ட இதே ஊரை சேர்ந்த நபர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story