இளைஞர் மீது தாக்குதல் – மூவர் மீது வழக்குபதிவு
விருதுநகரில் இளைஞரை தாக்கியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
விருதுநகர் ராமமூர்த்தி சாலை கம்மாபட்டி பகுதியைச் சார்ந்தவர் பிரகாஷ் என்ற குமார். இவர் கடைக்கு செல்வதற்காக அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது விருதுநகர் ரோசல்பட்டி பகுதியைச் சார்ந்த அருண், மாரிச்செல்வம், குமரேசன் ஆகிய மூவரும் பிரகாஷ் என்ற குமாரை வழிமறைத்து தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பிரகாஷ் என்ற குமார் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story