திருப்பத்தூர் அருகே 3 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்த்தில் கைது
கைது செய்யப்பட்டவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என சட்டவிரோதமாக கண்டறிந்து பணம் பறித்த வந்த 3 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு! திருப்பத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு, சாமநகர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார இவர் திருப்பத்துாரில் ஸ்கேன் சென்டர் வைத்துக் கொண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பத்துார் மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து பெண் குழந்தை என்றால் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்து வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே போலீசார் வழக்கு பதிவு செய்து 5 முறைக்கு மேல் கைது செய்துள்ளனர்.
ஆனால் மீண்டும் மீண்டும் சிறையில் இருந்து வெளியே வந்து அதே தொழிலில் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையே சட்ட விரோத கருக்கலைப்பு தொழிலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தொடங்கினார். இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின்பேரில், சுகுமார் நடத்தி வந்த போலி மருத்துவமனையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க போலீசார் மற்றும் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் ரகசிய விசாரணையில் இறங்கினர். அப்போது திருப்பத்துார் அடுத்த பேராம்பட்டு அருகே சிம்மனபுதுார் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவும், போலீசாரம் அந்த பகுதிக்கு விரைந்தனர் அங்கிருந்த கர்பிணி பெண்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது புரோக்கர்கள் மூலம் சுகுமாரிடம் கருக்கலைக்க வந்தது தெரிந்தது அப்போது அதிகாரிகளை கண்டதும் சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். பின்னர் கர்ப்பிணி பெண்களிடம் இது போன்ற போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். க
ருக்கலைப்பு என்பது குற்றச் செயலாகும். என அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர். இதனை தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு சுகுமார் மற்றும் கூட்டாளிகள் வேலூரில் தலைமறைவாக உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. வேலூருக்கு விருந்து தனிப்படை போலீசார் தலைமறைவாக இருக்க சுகுமார், சங்கர், வேடியப்பன், சிவா,விஜய், உள்ளிட்ட ஐந்து பேரை கடந்த 10ஆம் மாதம் தனிப்பட போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர் . பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பெயரில் கரு கலைப்பு கும்பலான சுகுமார், சங்கர்,சிவா உள்ளிட்ட நபர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.