சங்ககிரி அருகே தம்பதியிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிப்பு

சங்ககிரி அருகே தம்பதியிடம் 3 சவரன் தங்கச் செயின் பறிப்பு

கோப்பு படம் 

சங்ககிரி அருகே தம்பதியிடம் 3 சவரன் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள தாஜ் நகர் பகுதி சேர்ந்த முருகேசன் இவர் கிழக்கு தொட்டிபாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஒயர் மேனாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள,

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு சங்ககிரி தாமஸ் காலனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் தலை கவசம் அணிந்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் முருகேசனின் இரு சக்கர வாகனத்தில் உரசாவது போல் சென்றுள்ளனர்.

அப்போது அதிர்ச்சி அடைந்த முருகேசன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். மீண்டும் திரும்பி வந்த மர்ம நபர்கள் முருகேசன் மனைவி செல்வி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து கணவன் மனைவி இருவரும் சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story