பழங்காநத்தம் நேரு நகரில் 3 சவரன் தங்க நகை, 27000 ரூபாய் பணம் திருட்டு!

பழங்காநத்தம் நேரு நகரில் 3 சவரன் தங்க நகை, 27000 ரூபாய் பணம் திருட்டு!

திருட்டு!

பழங்காநத்தம் நேரு நகரில் 3 சவரன் தங்க நகை 27000 ரூபாய் பணம் திருட்டு!
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் காவல்துறை வீட்டில் குடியிருக்கும் பெண் வீட்டில் இருபதாயிரம் ரூபாய் பணம் 3 சவரன் தங்க நகை கொள்ளை காவல்துறை தீவிர விசாரணை. மதுரை பழங்காநத்தம் நேரு நகர் பகுதியில் S.S. காலனி காவல்துறை சார்பு ஆய்வாளர் மணிவன்னன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அங்கு வாடகைக்கு குடியிருக்கும் மாடிவீட்டில் சாந்தினி மற்றும் அவருடைய மகள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் சென்னைக்கு கடந்த 13ம் தேதி உறவினர் திருமணத்திற்கு சென்று தற்போது வீட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் உள்ள 27 ஆயிரம் ரூபாய் பணமும் மூன்று சவரன் தங்க நகையும் திருடு போனது தெரியவந்தது. உடனே எஸ் எஸ் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் எஸ் எஸ் காலனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று தடைகளை சேகரித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். நிலையில் எஸ் எஸ் காலனிக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவல் துறையினர் மிக குறைவாக இருப்பதால் குற்ற சம்பவங்கள் இப்பகுதியில் அதிகமாக நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story