கஞ்சா கடத்தலை தடுக்க 3 மாநில போலீசார் இணைந்து நடவடிக்கை - எஸ்பி தங்கதுரை

அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மூன்று மாநில போலீசாருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 40 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 13 இரு மாநில சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

கஞ்சா கடத்தலை கடக்க தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா ஆகிய மூன்று மாநில போலீசார் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த நான்கு மாதத்தில் மாவட்டத்தில் 22 கொலைகள் நடந்துள்ளது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ததாக 138 நபர்கள் மீது 127 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இணையவழி குற்றங்கள் தொடர்பாக 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 8 கோடி 4 லட்சத்தி 50 ரூபாய் பொதுமக்கள் இணைய வழி குற்றத்தில் இழந்துள்ளனர். அதில் 5 கோடியே 80 லட்சத்து 2000 ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 47 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார். மேலும் கோடை விடுமுறைக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது நகை பணம் போன்ற உடைமைகளை பாதுகாப்பாக வைத்து செல்ல வேண்டும், அருகே உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும், நீர் நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும், என வேண்டுகோள் விடுத்தார்

Tags

Read MoreRead Less
Next Story