வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
மெர்லின் ராஜ்
கொல்லங்கோட்டில் பெண்ணியிடம் தங்கச்செயினை பறித்துச் சென்ற வாலிபருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி குழித்துறை கோர்ட் தீர்ப்பளித்தது.
குமரி மாவட்டம் கொல்லங்கோடு நகராட்சியில் தற்காலிக வரி வசூலிப்பாளராக வேலை பார்த்து வருபவர் பிளஸ்சி (33). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கச்சேரி நடைப்பகுதியில் வைத்து பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் பிளஸ்சியின் கழுத்தில் கிடந்த ஏழு பவுன் தங்கச் செயினை பார்த்து சென்றார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, முளகுமூடு அருகே வெட்டுக்காட்டு விளை பகுதியை சேர்ந்த மெர்லின் ராஜ் (39) என்பவரை கைது செய்து, நகையை மீட்டனர். இது சம்பந்தமான வழக்கு குழித்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட் - 2-ல் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மெர்லின் ராஜிக்கு மூன்று வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

Tags

Next Story