வீலீங் செய்த 3 இளைஞர்கள் கைது : 25 ஆயிரம் அபராதம், டிஎஸ்பி எச்சரிக்கை

வீலீங் செய்த 3 இளைஞர்கள் கைது : 25 ஆயிரம் அபராதம், டிஎஸ்பி எச்சரிக்கை

வீலிங்

ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலீங் செய்த 3 இளைஞர்கள் கைது : 25ஆயிரம் அபராதம். இனி வீலிங் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓசூர் டிஎஸ்பி எச்சரிக்கை

தீபாவளி பண்டிகையின்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டே அதிகவேகத்தில் சென்று வீலீங் செய்து சாகசம் செய்யும் வீடியோ சமூக வலையதளங்களில் பரவியது.இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை வீலீங் செய்த இளைஞர்களை கைது செய்தனர். இது போன்று போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூர் ஏற்படுத்தும் வகையில் வீலீங் செய்யும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.

அதன் பேரில் கவல்துறையினர் வீலீங் செய்யும் இளைஞர்களை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூர் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டிஎஸ்பி பாபுபிரசாந்த் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் வீலீங் செய்த 6 இளைஞர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முகமது அப்ரார் (22) அதே பகுதியை சேர்ந்த அபுபக்கர் (23) அட்கோ பகுதியை சேர்ந்த சையது முகமதுஅலி (19) ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. வீலிங் ஓட்டிய மேலும் 3 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சிறுவர்களும் 25 வயது ஆகும் வரை அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற தடை செய்யப்பட்டது. பின்னர் 6 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓசூர் டிஎஸ்பி கூறும் போது சாலைகளில் வீலீங் செய்யும் இளைஞர்களின் வீடியோக்களை பொதுமக்கள் 638329123 என்ற வாட்சாப் எண்ணுக்கு அனுப்பினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் அளிப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும். இனி ஓசூர் பகுதில் வீலீங் செய்பவர்கள் மீது கடுமையான நடடிக்கை எடுக்கக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story