30 ஆடுகளை பலிகொண்ட மர்ம விலங்கு பரபரப்பு

X
Tenkasi King 24x7 |9 Jan 2026 12:14 PM IST30 ஆடுகளை பலிகொண்ட மர்ம விலங்கு
தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியது
Next Story
