30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 9 ஆயிரம் அபராதம்
Komarapalayam King 24x7 |8 Nov 2024 5:51 PM GMT
குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகராட்சி சார்பில் 30 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 9 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குமாரபாளையத்தில் அதிக நடமாட்டம் உள்ளதாக புகார் வந்ததையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் பேக்கரி, ஓட்டல், உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 30 கிலோ பிளாஸ்டிக் கேரி பேக், ஒருமுறை பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டு, 9 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் எஸ்.ஐ. சந்தானகிருஷ்ணன், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சுப்ரமணி, பரமேஸ்வரன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர் கெளதம், பரப்புனர்கள், அறிவுசெல்வன், பார்த்திபன், கவுதம் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story