குமரி : அரசு ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு.

குமரி : அரசு ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு.
திருட்டு நடந்த வீடு.
தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் வயது (56). அரசு இஸ்ஐ மருத்துவமனையில் பார்மஸ்சிட்டாக பணியாற்றி வருகிறார். கடந்த ஞாயிற்றுகிழமை குடும்ப நிகழ்ச்சிக்காக கோயம்புதூருக்கு மனைவியுடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்து நேற்று முன்தினம் இரவு வீட்டிற்க்கு வந்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு உள்ளே புகுந்து, 30 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

உடனே ராஜ்குமார் திருவட்டார் போலிசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வீட்டில் உள்ள சிசிவிடி கேமராவை ஆய்வு செய்த போது, 7 கேமிராக்களை திசை மாற்றி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. மேலும் கேமிராவில் இருந்து செல்போனுக்கு வரும் இணைப்புகளை செயலிழக்க செய்து இந்த திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story