குடியாத்தம் நகராட்சியில் 30 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை

குடியாத்தம் நகராட்சியில் 30 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை

பைல் படம் 

குடியாத்தம் நகராட்சி பகுதியில் 30 ஆயிரம் பேர் வாக்களிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட கலெக்டர் வி.ஆர்.சுப்புெலட்சுமி உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் சுபலட்சுமி மேற்பார்வையில் தாசில்தார் சித்ராதேவி உள்ளிட்ட வருவாய்த்துறையினர், குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் எம்.மங்கையர்க்கரசன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை குடியாத்தம் நகராட்சி பகுதிகளில் நடத்தினார்கள்.

குடியாத்தம் நகராட்சியில் 85 ஆயிரத்து 234 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களுக்காக 81 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் குடியாத்தம் நகராட்சி பகுதியில் 55 ஆயிரத்து 210 பேர் வாக்களித்தனர். இது 64 சதவீத வாக்குப்பதிவு ஆகும். குடியாத்தம் நகராட்சி பகுதியில் மட்டும் 30 ஆயிரத்து 24 பேர் வாக்களிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. குடியாத்தம் நகராட்சி பகுதியில் 3-ல் ஒரு பங்கிற்கு மேலாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story