ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை,அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்ப்பு.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.2.50 கோடி மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50.00 இலட்சம் என மொத்தம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணியினை பூமிபூஜையிட்டு, தொடங்கி வைத்தார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் விளையாட்டு துறையினை மேம்படுத்தவும், தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் பங்குபெறவும், பல்வேறு முனைப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்பது இலக்காகும். அதனப்படையில் நாமக்கல் மாவட்டத்திலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், விளையாட்டு அரங்கம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அந்த வகையில் இன்றைய தினம் இராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.2.50 கோடி மற்றும் இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50.00 இலட்சம் என மொத்தம் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கம் அமைக்க ஆணை வழங்கிய மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களுக்கு இத்தொகுதி மக்களின் சார்பிலும், இப்பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற அடிப்படையிலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் சார்பிலும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விளையாட்டு அரங்கில் ஓடுதளம், கால் பந்து மைதானம், கைப்பந்தாட்டம், கூடைபந்து, கோ-கோ, உயர் தாண்டுதல் மைதானம், கபாடி, புல்தரை மைதானம், சோலார் விளக்குகள், தீ தடுப்பாண்கள், நுழைவு வாயில், சுற்றுசுவர், அலுவலகம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பார்வையாளர் அமருமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.இராசிபுரம் சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பாக பழைய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளடைவில் மக்கள் தொகை பெருக்கம், குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஒரு புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவது அத்தியாவசியமாகிறது. குறிப்பாக, பொதுமக்களுக்கு சீரான தங்குதடையின்றி காவிரி குடிநீர் வழங்குவது என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இப்பகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு ஆதிராவிட நலத்துறை அமைச்சருமான மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்களும், நானும் முதலமைச்சர் அவர்களிடம் இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரு புதிய கூட்டுக் குடிநீர் திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நிதிநிலை அறிக்கையில் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில் உடனடியாக ரூ.854 கோடி மதிப்பீட்டில் புதிதாக கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிட்டார்கள்.அதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் நகராட்சி, இராசிபுரம், புதுச்சத்திரம், நாமகிரிப்பேட்டை மற்றும் வெண்ணந்தூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள், நாமகிரிப்பேட்டை பட்டணம், சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூர், வெண்ணந்தூர், அத்தனூர் மற்றும் மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள் என மொத்தம் 523 கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள் ஒன்றுக்கு 76.14 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கிடும் இராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ரூ.854.37 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. மேலும் இப்பகுதியில் ரூ.25.00 கோடியில் 10 ஏல மையம் அமைக்கப்பட்டு, தற்பொழுது ரூ.2.20 கோடி மதிப்பில் இராசிபுரம் அரசு பட்டுக்கூடு அங்காடிக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில் வசித்துவரும் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்கள் சொந்த மாவட்டத்திலேயே தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலை வாய்ப்புகள் ஏற்படுவதோடு, மாவட்டத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் ரூ.35.00 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா அமைக்க பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. எனவே இப்பகுதி வளர்ச்சிக்காக பட்டுகூடு மையம், ஏல மையம், கூட்டுக்குடிநீர் திட்டம், மினி டைடல் பூங்கா என எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வகிறது. போதமலை கீழுர்-மேலூர் மற்றும் கெடமலையில் கீழூர், மேலூர், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ.139.65 கோடி மதிப்பில் சாலை 2 சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இராசிபுரம் பகுதியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகள் ஏறத்தாழ 60 கி.மீ நீளத்திற்கு ரூ.30.00 கோடி மதிப்பில் செப்பணிடப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகள் 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.அதே போல ஊரக பகுதிகளில், இராசிபுரம், நாமகிரிபேட்டை, வெண்ணந்தூர் வட்டாரத்தில் கிராமபுற சாலைகள் ஏறத்தாழ 70 சதவீத்திற்கு மேல் செப்பணிடப்பட்டுள்ளது. பேரூராட்சியில் பட்டணம், அத்தனூர், வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர் ஆகிய பகுதிகளில் 90 சதவீத சாலைகள் முடிவுற்றுள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் அதிகளவில் ஒதுக்கீடு பெற்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், தாயுமானவர் திட்டம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மக்களிடத்தில் முழுமையாக கொண்டு சேர்க்கின்ற மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. மேலும் மெட்டாலா பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று காய்கறிகளை ஏல முறையில் விற்பனை செய்வதற்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.ராமசுவாமி, இராசிபுரம் நகர்மன்ற தலைவர் முனைவர் கவிதா சங்கர், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்எஸ்.கோகிலா உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


