சோலைமலை முருகன் கோவிலில் 300 மாணவிகள் பரதநாட்டியம் ஆடி சாதனை

முருகப் பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300 சிறுமிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் பிரசித்தி பெற்ற கோவில்களில் மதுரை அழகர் மலையில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவிலின் இராஜகோபுரம் முன்பாக - நூபுர கங்கை சாலையில் கலைகளில் ஈஷா கேந்திரா சார்பாக சிறந்த பாரம்பரியமிக்க பரத நாட்டிய கலையை பெருமைப்படுத்தும் வகையில், உலக சாதனைக்காகவும், இந்த நிகழ்ச்சி நடந்தது.

இதில் தமிழ்நாடு அளவில் 15 பள்ளிகளை சேர்ந்த 3 வயது முதல் 15 வயதுடைய மாணவ மாணவிகள் முருகன் வேடமணிந்து, அலங்கார ஆடைகளிணிந்து, கோபுரம் முன்பாக பாரத நாட்டியம் ஆடினர். சுமார் 15 நிமிடங்கள் ஒரே இடத்தில் 300 சிறுமிகள் பாரத நாட்டியம் ஆடி, பழமுதிர் சோலை முருகன் பற்றிய பாட்டுகளுக்கு ஏற்றார் போல், ஆடி பார்வையாளர்களின் கைதட்டலை பெற்றனர். மேலும் 300 சிறுமிகளுக்கு நோபிள் ரிக்கார்டு சார்பாக கேடயமும், சான்றிதழும், அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் நடந்த பாராட்டுதலுக்கு பிறகு வழங்கப்பட்டது.

Tags

Next Story