ராசிபுரம் அருகே 300 ஆடு, 400 சேவல், 80 பன்றிகளை பலியிட்டு வழிபாடு

ராசிபுரம் அருகே 300 ஆடு, 400 சேவல், 80 பன்றிகளை பலியிட்டு வழிபாடு

வழிபாடு செய்த மக்கள்

ராசிபுரம் அருகே 300 ஆடு, 400 சேவல், 80 பன்றிகளை பலியிட்டு 1500 பேர் வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் அறமத்தாம்பாளையம் பகுதியில், சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு மற்றும் சென்னை பகுதிகளில் வாழும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் ஸ்ரீமத் பெருமாள் சுவாமி, ஸ்ரீ கருப்பண்ணர் சுவாமி, ஸ்ரீ வீரமாத்தி அம்மன் சுவாமி கும்பிடும் விழா கடந்த, 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், பொங்கல் வைத்தல், பன்றி குத்துதல், கிடா வெட்டுதல், சேவல் அறுத்தல் ஆகிய முப்பூசை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாலை ஸ்ரீ கருப்பண்ண சுவாமிக்கு 300 ஆடு, 80 பன்றி, 400 சேவல் பலியிட்டும், 1000க்கும் மேற்பட்டோர் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள், கோவிலுக்கு தானமாக வழங்கும் ஆடு சேவல் பன்றிகளை பலியிடுகின்றனர்.

வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

Tags

Read MoreRead Less
Next Story