தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 300 கிலோ பறிமுதல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 300 கிலோ பறிமுதல்
பொ. மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்கிறது. இதனை அடுத்து பேருந்து நிலையம், தர்மபுரி மெயின் ரோடு, சேலம் ரோடு, ஆர்.எம்.நகர் ரோடு, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்து தலைமையில் மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். அப்போது பேரூராட்சி பகுதி கடைகளில் தடை செய்யப்பட்ட, 300 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story