விழுப்புரம் அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் அருகே 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது.

விழுப்புரம்அருகே உள்ள குண்டலப்புலியூர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கெடார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார், குண்டலப்புலியூர் பகுதிக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் கையில் சாக்குப்பைகளுடன் நின்றுகொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். உடனே அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சத்தியமூர்த்தி (வயது 48), கணேஷ் (34), ஆத்தங்குடியை சேர்ந்த கார்த்திக் (33), பாலு (59), மணிகண்டன் (45) என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் 5 பேரும் விழுப்புரம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கியிருந்து கெடார் மற் றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களுக்கு சென்று அங்குள்ள மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை மூட் டைகளாக கட்டிக்கொண்டு வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சத்தியமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 300 கிலோ எடை கொண்ட 6 மூட்டைகளில் இருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள், வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்க பயன்படுத்திய 3 எடை எந்திரங்கள், அதற்கு தேவையான 1,000 சாக்குப்பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story